கடலூர்: நாளை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

கடலூர்: நாளை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்
X
கடலூர் மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை அன்று பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி மார்ச் மாதத்திற்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கடலூர், காட்டுமன்னார்கோவில், ஶ்ரீ முஷ்ணம், பண்ருட்டி, திட்டக்குடி, சிதம்பரம், புவனகிரி, வேப்பூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் குறித்த மனுக்களை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடக்கும் முகாமில் அளிக்கலாம். இதில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story