கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

X
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் *** தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டின் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி கலையரங்கில் 06.03.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் எதிர்கால சந்ததியினர்கள் தாங்கள் படிக்கும் போதே உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பல்வேறு துறையின் சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் 2025 ஆம் ஆண்டின் கல்லூரி மாணவ, மாணவியருக்காக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் ஒன்றே குலம் ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும் மதவெறி நீங்கட்டும், மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும், ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு, இந்திய சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு, சதிக்கு கால் முளைந்து சாதியானது, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், சமகால ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள், விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு, தமிழர்களாய் உயர்வோம் தமிழ் தலை நிமிர்ந்து நிற்போம், ஆகிய 10 தலைப்புகளில் தமிழ் போட்டியிலும் மற்றும் The Idea of India, Multiculturalisam is the essence of Indian Nationhood!, When Democracy becomes majoritarianisam?, Challenges for Liberal Democracy, The Right to Dissent, Why we should be a casteless society?, Liberty, Equality & Fraternity, Commerce without morality, Gender Equality vital for a vibrant society,The Magnanimity and inclusiveness of Tamil culture. ஆகிய 10 தலைப்புகளில் ஆங்கில பேச்சுப்போட்டிகளில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்ட 163 மாணவ,மாணவியர்களில் 123 நபர்கள் தமிழ் போட்டியிலும், 40 நபர்கள் ஆங்கில போட்டியிலும் பங்கேற்றனர். தமிழ் பேச்சுப் போட்டியில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பயிலும் மாணவி மா.கெளசல்யா முதலாமிடமும், சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவி க.காவியா இரண்டாமிடமும், கரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு உயிர்தொழில்நுட்பவியல் பயிலும் மாணவி பா.அனிதா மூன்றாமிடமும், ஆங்கில பேச்சுப்போட்டியில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயிலும் மாணவி டி.ஷைலோ பிரயன்னா முதலிடமும், ஸ்ரீசாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஏ.அஷ்மா இரண்டாமிடமும், தனலட்சுமி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி சௌ.சௌமியா மூன்றாமிடமும் பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் போட்டிகளுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.25,000 மும் தமிழ் மற்றும் ஆங்கில போட்டிகளுக்கு தனி தனியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ் குமார், அட்மா தலைவர் திக்ஷவீ.ஜெகதீசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.டி.ஆர்.சிவசங்கர் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

