நகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
X
தாராபுரம் நகராட்சியில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தாராபுரம் நகராட்சியில் 2024-2025-ம் ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் கட்டணம் செலுத்தாத உடுமலை சாலை பகுதியை சேர்ந்த 2 வீடுகளில் குடிநீர் இணைப்பை நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் முத்துலட்சுமி, கமலவாணி ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் துண்டித்தனர். இது குறித்து ஆணையாளர் திருமால் செல்வம் கூறும் போது " பொது மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற வரியினங்களை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது தவிர அவரது சொத்துக்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பொது இடத்தில் விட்டு நகராட்னசிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகைக்கு ஈடுசெய்யப் படும் என்றார்.
Next Story