தென்காசியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என தகவல்

X
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெளியூர்களுக்கு பயணம் செய்யும் போது மக்கள் கவனமாக சென்று வர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story

