சோளிங்கர்:புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்!
ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சோளிங்கர் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் N.R. இளங்கோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, அவர்கள் தலைமை தாங்கினார்கள். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் துரை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



