ஈசனூர் ஆரிஃபா பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான

மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ஈசனூர் ஆரிஃபா பாலிடெக்னிக் கல்லூரியில், பெண்களுக்கான  மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி வெள்ளி அன்று தொடங்கியது. கல்லூரி வளாகத்தில், 2 நாட்கள் நடைபெறும் கோ-கோ விளையாட்டு போட்டியில், திருச்சி, காஞ்சிபுரம், சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர்,வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆரிஃபா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்.அசாரூதீன், முதல்வர் டி.நமச்சிவாயம், ஜி.ஹிப்ட்சன் சாமுவேல் ஆகியோர்  போட்டியைத் தொடங்கி வைத்தனர். போட்டியை, உடற்கல்வி இயக்குனர்கள் ரா.முகிலன், சி‌.அருள்தாஸ், ப.சரவணகுமார் உள்ளிட்டோர்  ஒருங்கிணைத்தனர். போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு நினைவுச் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
Next Story