அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி
X
மதுரை அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத் தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைக்கிறார். சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், அவைத் தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலர்கள் ஆசைக்கண்ணன், மூவேந்திரன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்கட்டை மக்கள் கட்ட ணமில்லாமல் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், மதுரை யிலிருந்து ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு சிறப்புப் பேருந்து வசதியும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்குப் ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story