மகளிர் மாரத்தான் போட்டி

மதுரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மதுரையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்கள் கலந்து கொண்ட மகளிர் தின மாரத்தான் நடைபெற்றது. இந்த போட்டியானது மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வேயர் காலனி சென்று அடைந்தது. மாராத்தான் போட்டியை காவல் ஆணையாளர் லோகநாதன் தொடங்கி வைத்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து மகளிர் காவலர்களுக்கு ஒரு நாள் சிறப்பு அனுமதியுடன் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச்.8) மாலை அமெரிக்கன் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
Next Story