திருப்பத்தூரில் அரசு துறை அலுவலர்கள் மகளிர் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு

திருப்பத்தூரில் அரசு துறை அலுவலர்கள் மகளிர் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி அரசு அலுவலர்கள் மனித சங்கிலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சிக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அருள்மொழி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் மற்றும் மாநில துணை செயலாளர் தினேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் பாலியல் தொல்லைகள் போதைப் பொருட்கள் ஒழித்தல் பெண் கொடுமைகள் பாலியல் சீண்டல் ஒழித்தல் பெண்கள் பாதுகாப்பு குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர் இதில் 100க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று கொண்டனர்.
Next Story