கோவை: கொங்கு ரத்தினங்கள், மாமணிகள் நூல்கள் வெளியீட்டு விழா !
கொங்கு மண்ணின் பெருமையை பறைசாற்றும் கொங்கு ரத்தினங்கள் & கொங்கு மாமணிகள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, கோவையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீன 25ஆம் பட்டம் குருமகாசந்நிதானங்கள் கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் கொங்கு ரத்தினங்கள் நூலினை வெளியிட்டு அருள்வாழ்த்துரை வழங்கினார். கௌமாரமரபு தண்டபாணி சுவாமிகள் வழிவழி சிரவை ஆதீன 4ஆம் பட்டம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கொங்கு மாமணிகள் நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். நல்லறம் அறக்கட்டளை தலைவர் திரு. எஸ்.பி. அன்பரசன் அவர்கள் விழா முன்னிலை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சக்தி குழும நிறுவனங்களின் செயல் இயக்குநர் திரு. தரணிபதி ராஜ்குமார் மற்றும் செல்வம் ஏஜென்சீஸ் மேலாண்மை இயக்குநர் திரு. டி. நந்தகுமார் ஆகியோர் நூல்களைப் பெற்று சிறப்புச் செய்தனர். கொங்கு ரத்தினங்கள் நூலின் ஆசிரியர் மூத்த வழக்கறிஞர் டாக்டர். எஸ்.கே. கார்வேந்தன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
Next Story



