விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து

X
உலக மகளிர் தினத்தை ஒட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி : - மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் வார்த்தைகளுக்கு ஏற்ப பெண் என்ற பிறவி மிக சிறப்பான ஓன்று. எங்கள் தாயாக, சகோதரிகளாக, ஆசிரியர்களாக சமூகத்தை உங்கள் நல்லுள்ளதாலும், கருணையாலும் வழி நடத்தி வருகிறீர்கள். பெண்ணின்றி அமையாது உலகு என்ற சொல்லுக்கேற்ப புவியினை நீங்கள் இயக்கி வருகிறீர்கள். உங்கள் திறமையாலும் அன்பினாலும் எந்த ஒரு மனிதனையும் மாற்றும் சக்தியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குடும்ப தலைவிகளாக மட்டுமின்றி இன்று எந்த ஒரு துறையிலும் பெண்களின் ஆதிக்கம் வியக்கும்படி உள்ளது. இது தொடர வேண்டும். ஆண் பெண் சமத்துவம் காக்கப்பட வேண்டும். பெண்களின் பெருமையை நாம் பேசும் பொழுதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிக பெரிய நிர்பந்தம் நமது சமூகத்திற்கு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் லட்சியம் நம் அனைவருக்கும் வேண்டும். பெண்ணின் பெருமை மற்றும் பெண்களின் பாதுகாப்பை நாம் எடுத்து அனைவருக்கும் கூறுவோம். மகளிரை போற்றி அவர்களுக்கான ஒரு தனி பாதையை நாம் அமைத்து கொடுப்போம். நிச்சயமாக பெண்கள் சேவைகள் செய்ய முன் வரும் போது நமது ஊர் மற்றும் நாடு மிக சிறந்த ஒன்றாக மாறும். பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கும் சாதனை பல செய்த மகளிரை போற்றுவோம் இந்நாளில். அவர்கள் வழியில் நமது குழந்தைகளை வழி நடத்துவோம். பெண்களின் வெற்றி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வோம். மகளிரை போற்றுவோம். மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
Next Story

