சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பேச்சரங்கம்

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பேச்சரங்கம்
X
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான "இன்றைய இளைய தலைமுறையின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனை" என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்று சிறந்த பேச்சாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் முதல் பரிசை ஈரோடு சட்டக்கல்லூரி மாணவர் ஞானபிரகாசும், 2-ம் பரிசை செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி ஆசிதா, மூன்றாம் பரிசை வருவான் வடிவேலன் கல்லூரி மாணவர் தங்கமுத்தும் பெற்றனர். பின்னர் இதற்கான பரிசளிப்பு விழா கல்லூரி விழா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி இணைப்பேராசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி பேசினார். விழாவில் கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, துணை முதல்வர் சாந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இலக்கிய மன்ற குழுவின் உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழாவின் முடிவில் கல்லூரி உதவி பேராசிரியர் மேகலா நன்றி கூறினார்.
Next Story