பேரூராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் 

பேரூராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் 
X
வில்லுக்குறி
குமரி மாவட்டம் வில்லுக்குறி  பேரூராட்சிக்கு உட்பட்ட மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் பேரூராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீப காலமாக இங்கு கேரளாவை தலைமை இடமாகக் கொண்ட ஒரு தனியார் மருத்துவமனையின் கிளை மருத்துவமனை அந்த பகுதியில் செயல் படுகிறது. அங்குள்ள மருத்துவ கழிவுகளை வானங்களில் ஏற்றி வந்து பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டும் சம்பவம் நடந்து வருகிறது.       இந்த குப்பைகளை தெருநாய்களை இழுத்துச் சென்று அருகில் உள்ள விளை நிலங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் போடுகின்றன. மேலும் பேரூராட்சி பணியாளர்களும் அங்குள்ள குப்பைகளை கொண்டு வந்து குப்பை கிடங்கில் கொண்டு வந்து தரம் பிரித்து பாலித்தீன் பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை ஒன்றாக எரியூட்டும் சம்பவங்களும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.       பேரூராட்சி நிர்வாகத்துடன் கேட்டபோது சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் வரி கட்டுவதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story