சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த மாணவிக்குப் பாராட்டு

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த மாணவிக்குப் பாராட்டு
X
மானாமதுரை அருகே சாலையில் கிடந்த பணத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்த மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மூவிகாஸ்ரீ. இவா் காலையில் பள்ளிக்கு வந்தபோது அங்குள்ள சாலையில் கீழே கிடந்த ஆயிரம் ரூபாயைக் கண்டெடுத்தாா். இந்தப் பணத்தை ஆசிரியை சகாயமைக்கேல் சாந்தி மூலம் தலைமை ஆசிரியா் சிவகுருநாதனிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, தலைமை ஆசிரியா், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவி மூவிகாஸ்ரீக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினாா். இந்தப் பணத்துக்கு உரியவா் ஆதாரங்களுடன் கூறினால் அவா்களிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.
Next Story