ராமநாதபுரம் மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது
ராமநாதபுரத்தில் உலக மகளீர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் துவக்கி வைத்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி காவல்துறை அலுவலகம் முன்பு நிறைவடைந்தது மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் சைபர் குற்றம் போன்றவைகளை தடுக்க புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்களை அறியும் வகையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் போலீசார்களும் கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ், வெற்றி கோப்பைகளை வழங்கினார்.
Next Story