இலக்கிய மன்றப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

X
அரியலூர், மார்ச் 8- மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றல அரியலூர் அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தோம் அரசு பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற கட்டுரைப் போட்டியில், இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி அனுஸ்ரீ 5 இடமும், தமிழ்ப் பேச்சுப் போட்டியில் நேகாயாத்ராராய் 11 ஆம் இடமும் பிடித்து பரிசுகளை வென்றனர். இதே போல் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் விக்னேஷ், ஓவியா, சுந்தரமூர்த்தி, சரணேஷ்வரன், ராஜஸ்ரீ, நிஷாலினி, சுதாகர் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். இதையடுத்து மாணவர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு பாராட்டு விழா அப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, மேற்கண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டு தெரிவித்து, இது போன்ற திறன்களை வளர்த்துக் கொண்டு சாதனைப் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பர்ட் அருள்ராஜ், மதியழகன், கஸ்தூரி, அனிதா ஆகியோர் செய்திருந்தனர். : .
Next Story

