பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு:இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் மனு அளிப்பு

பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு:இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் மனு அளிப்பு
X
பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு:இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்,மார்ச். 8- அரியலூர் மாவட்டம், கல்லக்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் முத்துராஜ்(27). இவரது மனைவி திவ்யதர்ஷினி(20) பிரசவத்துக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திவ்யதர்ஷினி உயிரிழந்தார். இந்நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
Next Story