சிறுவளூர் அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிறுவளூர் அரசுப் பள்ளி ஆண்டு விழா
X
சிறுவளூர் அரசுப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
அரியலூர், மார்ச் 8- : அரியலூரை அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 23 ஆவதுஆண்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியர் பிரபாகர் பேசுகையில், மாணவர்களின் தனித்திறமைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களை மெருகூட்ட வேணடும். கல்வியால் மட்டுமே உலகில் சிறப்புடன் வாழ முடியும் என்றார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் நெகிழிப் பொருள்களை தவிர்க்கும் வகையில், அனைத்து மாணவர்களுக்கும் ஸ்டீல் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவுக்கு லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னதுரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியை ஆசிரியை அபிராமி தொகுத்து வழங்கினார். முன்னதாக ஆசிரியை செந்தமிழ் செல்வி அனைவரையும் வரவேற்றார் . முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடேசன், அந்தோணிசாமி ,பாலமுருகன், ஆய்வக உதவியாளர் மணிகண்டன், ஆகியோர் மேற்கொண்டனர் .
Next Story