முத்தூரில் இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கினார்

முத்தூரில் இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கினார்
X
முத்தூர் பகுதிகளில் 419 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கினார்
முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வருவாய் கிராம பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா மேட்டுக்கடை என்.எஸ்.பி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு முத்தூர் பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகம் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 419 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் முத்தூர் அருகே மேட் டாங்காட்டுவலசு கிராமத்தில் பொது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ 41 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெய ராமகிருஷ்ணன், துணை செயலாளர் ராசி முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே..சந்திரசேகரன், பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத்தலைவர் மு.க.அப்பு, வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். இளவரசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story