பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தினக் கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தினக் கொண்டாட்டம்
X
பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தினக் கொண்டாட்டப்பட்டது.
அரியலூர், மார்ச் 8- அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உலக மகளிர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்ப்டடது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவுக்கு அக்கல்லூரியின் முதல்வர் க.ரமேஷ் தலைமை வகித்து, மாணவிகள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் செங்குட்டுவன், சமூக ஆர்வலர் சோபனா பன்னீர்செல்வம், கல்லூரி தமிழத் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான வடிவேலன், உடற்கல்வி இயக்குநர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ம.ராசமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கோ.பவானி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக ஆங்கிலத் துறை கெüரவ விரிவுரையாளர் பெ. மேகலா வரவேற்றார். முடிவில் வணிகவியல் துறை கெüரவ விரிவுரையாளர் ஆ. அகிலா நன்றி தெரிவித்தார். சிறுவளூர்: சிறுவளூர்அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், காவல், ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உடையார்பாளையம்: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க.முல்லைக்கொடி தலைமை வகித்து பேசினார். முன்னாள் தலைமை ஆசிரியர் விஜயகுமாரான் கலந்து கொண்டு, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் கல்வியில்  வெற்றியடைச்  செய்யும். பிறருக்கு எந்த வகையிலும் துன்பத்தை கொடுக்காமல் இருந்தால் வாழ்வில் வெற்றிப் பெறலாம் என்று தெரிவித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர் பாவை சங்கர் அக்கால, இக்கால மகளிர் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் இங்க்சால் வரவேற்றார். முடிவில் கணித ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்
Next Story