ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி சாதனைகளை செய்ய வேண்டும் சர்வதேச மகளிர்தின விழாவில் அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி சாதனைகளை செய்ய வேண்டும் சர்வதேச மகளிர்தின விழாவில் அறிவுறுத்தல்
X
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி சாதனைகளை செய்ய வேண்டும் சர்வதேச மகளிர்தின விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மார்ச். 8- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் மேகலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். இரமேஷ் மாணவிகள் தங்கள் வீரம், கருணை, நிர்வாகம் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தலைமையுரை ஆற்றினார். இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் இராசமூர்த்தி விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியரும் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவருமான செங்குட்டுவன் தனது மகளிர் தின சிறப்புரையில் இன்றைய சர்வதேச மகளிர் தின கொண்டாடப்படுவதற்கான நினைவுகளை பகிர்ந்து, மாணவிகள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்தி நாளை பல சாதனைகளை படைக்கவேண்டும் என எடுத்துரைத்தார். அரியலூரைச் சார்ந்த சிறுகதை எழுத்தாளரும், சமூக சேவகருமான சாதனைப்பெண்மணி சோபனா பன்னீர்செல்வம் தனது சிறப்புரையில் பெண்ணாகிய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து மாணவிகள் தன்னை முன்னுதாரணமாக கொண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதித்து சிறந்தமுறையில் கல்வி பயின்று சாதனையாளர்களாக திகழவேண்டும் என்றும், சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அனைவருக்கும் உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழத்துறைத் தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேலன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்புப் பேச்சாளர் செங்குட்டுவன் எவரேனும் ஒரு மாணவி விழா மேடைக்கு வாருங்கள் என அழைத்தவுடன் அச்சமின்றி மேடையேறிய கல்லூரியின் முதலாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் பயிலும் மாணவி தனலெட்சுமியை சிறப்பு அழைப்பாளர் சாதனைப்பெண்மணி சோபனா பன்னீர்செல்ம் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அகிலா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பவானி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story