நீலகிரி மாவட்டம் உதகையில் பெண் அணிந்திருந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்து சென்ற கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெண் அணிந்திருந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்து சென்ற கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்
நீலகிரி மாவட்டம் உதகையில் பெண் அணிந்திருந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்து சென்ற கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்... நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உதகை இரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து இவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் இவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டி சென்று அவரை அப்பர்பஜார் பகுதியில் பிடித்தனர். அப்போது பொதுமக்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இதில் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டதில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அபின் ஷாகுல்(20) என்பதும், கடந்த வாரம் ஊட்டிக்கு வந்து, தங்கிருந்து இருந்ததும், தற்போது திருட்டு சம்பவத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக அந்த பெண்ணிடம் அவர் பறித்தது தங்க நகை இல்லை என்றும், அது கவரிங் நகை என்றும், தங்கம் என்று நினைத்து கவரிங் நகையை இவர் திருடியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Next Story