தமிழர் நீதிக்கட்சி சார்பில் உலக மகளிர் தின விழா

X
அரியலூர், மார்ச்.8- தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாநில மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் நீதி கட்சி நிறுவனர் தலைவர் சுபா இளவரசன் சிறப்புரை ஆற்றினார். அதில் கிராமத்தில் கூலி தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை, இதனை அரசு கருத்தில் கொண்டு ஆண் பெண் இருவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் மதுவால் கணவனை இழந்து பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு இழப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும், இளம் விதவைகள் உருவாவதை தடுக்கும் வகையில் மதுவை படிப்படியாக குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் வருகை புரிந்த பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
Next Story

