வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு
X
தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் கடை கடையாக சென்று அறிவுறுத்தல்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் மாசி மக திருவிழாவில், தேர் திருவிழா வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக, வேதாரண்யம் நகராட்சி, பொதுப்பணித் துறை, காவல்துறையினர் தேரோடும் நான்கு வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வேதாரணயம் வர்த்தகர்களிடம் கடை கடையாக நேரடியாக சென்று அறிவுறுத்தினர். வேதாரண்யம் கோவிலின் மாசி மக உற்சவம் கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காட்சி கொடுத்த நாயர் 16 கால் மண்டபத்திற்கு எழுந்தருளல், சந்திரசேகர சுவாமி அம்பாள் சகிதமாய் நாள் தோறும் இந்திர விமானம், யானை, பூத வாகனம், அன்ன வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காட்சிகளும் நடைபெற்று வருகிறது. தேர் திருவிழா வருகிற 10-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இதற்காக, தியாகராஜ பெருமான் கனக வசந்த மண்டபத்தில் எழுந்தருளி நடைபெற உள்ள தேர் திருவிழா குறித்து, அனைத்து துறை அதிகாரிகள், அறநிலைத்துறையினர் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தேரை பாதுகாப்பாக ஓட்டுவது, பக்தர்களின் வசதி, அன்னதானம், போக்குவரத்து வசதி குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story