மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி புரியும் மகள்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட எஸ்பி

காவல் அலுவலகத்தில் சீருடைகள் பணியாற்றி வந்த காவலர்கள் ஒரே வண்ணம் கொண்ட புடைவையில் மகளிர் தின விழா கொண்டாடினர்
தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அனைவரும் மகளிர் தின நிகழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தேசிய மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் - 08 -ம் தேதி கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா காவல் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும் மகளிர் அனைவரும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்) மற்றும் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
Next Story