மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் காரணிகள் 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பங்கேற்றனர்
பெரம்பலூரில் மகளிர் போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் மகளிர் போலீசார் சார்பில் "பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு" குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.பேரணியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணான 181 குறித்து டீ சர்ட் அணிந்து பெண்காவலர்கள் பேரணியாக வந்தனர் பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணி வெங்கடேசபுரம் , ரோவர் வளைவு வரை வந்து பின் மீண்டும் பாலக்கரையில் நிறைவு பெற்றது இப்பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் மற்றும் வேப்பந்தட்டை அரசு கல்லூரி மாணவிகள் பலர் பங்கேற்றனர்
Next Story