பாறைகளை உடைக்க வெடி பொருட்கள் பயன்படுத்தியுள்ளார்களா என. கோத்தகிரி வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அனுமதியின்றி ராட்சத பாறைகள் உடைப்பு. சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் பாறைகளை உடைக்க வெடி பொருட்கள் பயன்படுத்தியுள்ளார்களா என. கோத்தகிரி வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி பாறைகளை உடைக்கவோ, ஆழ்துளை கிணறுகள் அமைக்கவோ தடை உத்தரவு உள்ளது. இருப்பினும் சிலர் தடையை மீறி அனுமதியின்றி பாறைகளை உடைத்து வருகின்றனர். இதனால் பேரிடர் காலங்களில் கடும் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தி பாறைகளை உடைத்து மண் அகற்றி வருகின்றனர். குறிப்பாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் பகல் நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட பொக்லைன் பயன்படுத்தி பாறைகளை உடைத்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார் மேலும் பாறைகளை வெடி பொருட்கள் பயன்படுத்தி உடைத்துள்ளார்களா? என கோத்தகிரி வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கபட உள்ளதாக Vo தெரிவித்தார். ..
Next Story

