பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்

பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
X
திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர் கைது
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே பாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பட்டதாரி பெண். இவர் திருத்துறைப்பூண்டி அருகே கடிகைச்சேரி பகுதியை சேர்ந்த திருமலைவாசன் (27) என்வருடன் பிளஸ்-2 படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி வந்த 2 பேரும் பின்னர் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, திருமலைவாசன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டில் யாரும் இல்லதபோதும், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் தங்கும் அறை எடுத்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். பின்னர், அந்த பெண் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்து வந்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமலைவாசனை கைது செய்து, கோர்ட் உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
Next Story