சேவை குறைபாடு காரணமாக ஆயக்காரன்புலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் தெற்கில் வசித்து வருபவர் காந்தி. இவர் தனது சொந்த காருக்கு இன்சூரன்ஸ் புதிப்பித்து உள்ளார். அதற்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஆயக்காரன்புலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தனது கணக்கில் காசோலை கொடுத்துள்ளார். வங்கி கணக்கில் போதிய நிதி இருப்பு இருந்தும், ஆயக்காரன்புலம்வங்கி கிளையில், மூன்று முறை காசோலைக்கு பணம் செலுத்தாமல், திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த சேவை குறைபாடு காரணமாக, நாகப்பட்டினம் நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் கோர்ட், வங்கியின் சேவை குறைபாட்டை உறுதிப்படுத்தி. மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாகவும், நீதிமன்ற செலவிற்கு ரூ.10 ஆயிரமும் கொடுக்க ஆணையிட்டது. தவறும்பட்சத்தில், புகார்தாரர் தாக்கல் செய்த தேதி முதல் 100 ரூபாய்க்கு, அரை சதவீதம் என்ற வீதத்தில் வட்டி கணக்கிட்டு மொத்த தொகையும், செலுத்தி முடிக்கும் வரை கணக்கிட்டிட்டு, செலுத்த படவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆயக்காரன்புலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் செலுத்தாமல் வங்கி நிர்வாகம், மனுதாரரை அலட்சியப்படுத்தியது. இதனால், மனுதாரர் மேல் முறையிடு செய்து, அசல் மற்றும் வட்டியுடன் ரூ.ஒரு லட்சத்து 18 ஆயிரம் நீதிமன்றம் மூலம் மனுதாரர் காந்திக்கு வழங்கப்பட்டது.
Next Story

