பெண்களுக்கு கல்வி கிடைத்தால், அவர்கள் தனிமைப்படுத்தப் படமாட்டார்கள்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மார்ச் 8, 2025 அன்று உலக மகளிர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கவிஞர் எம். சுடர்விழி, மூத்த சமூக பாதுகாப்பு உதவியாளர், பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (மண்டல அலுவலகம்), கோயம்புத்தூர் கலந்து கொண்டார். நமது கல்வி நிறுவனங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அவர்களின் கல்வி, ஆராய்ச்சி, மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி, வெற்றி பெறுவதற்கான சிறந்த சூழலை உருவாக்க நமது கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து பாடுபடும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகளிர் தினத்தில், நாம் அனைவரும் பெண்களின் வளர்ச்சிக்காக உறுதி எடுக்க வேண்டும். பெண்களுக்கு மேம்பாடு தேவை என்பதல்ல, அவர்களிடம் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வர அவர்களுக்கு வாய்ப்பு தேவை. எனவே , நாம் நமது பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பெண்களின் உரிமைகளை பாதுகாக்க, அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய, மற்றும் சமத்துவமான உலகை உருவாக்க முனைந்து செயல்படுவோம்”. என்று பேசினார். இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, மார்ச் 8 அன்று மட்டும் உலக பெண்கள் தினம் அல்ல வருடத்தின் ஒவ்வொரு நாளும் பெண்கள் தினம்தான் ஏனெனில் பெண்கள் ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கும், வீட்டிற்கும், நாட்டின் பாதுகாபிற்க்கும், மற்றும் பல துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். பெண்கள் முன்னேற்றிதிற்கு மிகவும் முக்கியமானது கல்வியாகும், இந்த கல்வி மட்டுமே உலகத்தில் சரி எது தவறு எது என்பதை பகுத்தறிய உதவும். மேலும் கல்வி மட்டுமே உலகில் உள்ள மற்ற மொழி, இனம், கலாச்சரம் கொண்ட மக்களுடன் பழக மற்றும் பல்வேறு தொழினுட்பங்களை கற்று கொள்ள முடியும். உதராணமாக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மொழி பேசும் மாணவர்கள் உள்ளனர். கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் பயிலும் மாணவர்களின் கலாச்சரம், மொழி, பழக்கவழக்கங்களை கற்று கொள்ள கல்வி மிக முக்கியமானதாகும். மேலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது – பெண்களுக்கு கல்வி கிடைத்தால், அவர்கள் தனிமைப்படுத்தப் படமாட்டார்கள். அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக நிற்கும் நிலையை அடைவார்கள். கல்வியே அவர்களை திறமைமிக்க மற்றும் சக்திவாய்ந்தவர்களாக மாற்றும் முக்கியக் கருவியாக திகழ்கிறது. மாணவிகள் சமூக வலைதளங்களை அளவோடும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும், இன்றைய சூழலில் பொருளாதாரத்தின் அவசியமும், அந்தப் பொருளாதாரத்தைப் பெற வேண்டும் என்றால் கல்வி மிக மிக அவசியம் என்பதை தன் அனுபவம் வாயிலாக கூறினார். அடுத்த பத்து வருடங்கள் கழித்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவிகள் கல்லூரி முதல்வர்களாகவும், நீதிமன்ற நீதிபதிகளாகவும், மாவட்ட ஆட்சியர்களாகவும், மற்றும் பல்வேறு துறைகளில் முக்கிய பதிவிகளை அழகு பார்க்க வேண்டும் அதற்கு பயிற்சியும், முயற்சியும், சிறந்த கல்வியும் இருந்தால் போதுமானது. மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல், விவசாயம், மற்றும் வணிகத் துறைகளில் இங்கு பயிலும் பெண்கள், எதிர்கால இந்தியாவை உருவாக்கும் முக்கிய சக்திகளாக திகழ்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் மேலும் முன்னேற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக பேசினார்”. சிறப்பு விருந்தினராக கவிஞர் எம். சுடர்விழி, மூத்த சமூக பாதுகாப்பு உதவியாளர், பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (மண்டல அலுவலகம்), கோயம்புத்தூர் அவர்கள் கலந்து கொண்டு, மகளிர் அதிகாரம், கல்வியின் முக்கியத்துவம், மற்றும் சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு குறித்து உரையாற்றினார். இவ்விழாவில், வேந்தர் முன்னிலையில், மகளிர் கல்லூரியின் சார்பாக எனிக்குமா ஆய்விதழ் மற்றும் செய்திமடல் ஆகியன வெளியிடப்;பட்டது இந்த நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி, பல்கலைக்கழக புல முதல்வர்கள், பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், புலமுதல்வர்கள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் உட்பட 4000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் . தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமா தேவி பொங்கியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழாவின் நிறைவாக ஆங்கிலத்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி சண்முகபிரியா நன்றியுரை வழங்கினார்.
Next Story

