மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் சிறுவர் மன்றம் விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் சிறுவர் மன்றம் சார்பில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் என்ற குழந்தைகள் இல்லத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். மகளிர் பல்துறை மேம்பாடு"எனும் தலைப்பில்,பெரம்பலூர் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இல் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்விற்கு சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் லதாசெல்வம் தலைமையேற்றார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் காவல் சிறுவர் மன்ற நோடல் அலுவலர் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் P.மருதமுத்து பெரம்பலூர் மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு அலுவலர் Dr.வனிதா, பெரம்பலூர் மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு சமூக ஆலோசகர் தென்றல், அவர்களும், 181 மகளிர் உதவி வழக்கு பதிவாளர் செல்வி கீதா, கலந்து கொண்டனர். மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி சிறப்புரையில் நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், என்பதுமூத்தோர் வாக்கு, அவ்வகையில் மங்கையர்களாகிய நீங்கள் எதற்கும் பயப்படாமல் எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டும்,பெண் குழந்தைகளாகிய நீங்கள் யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது,பெற்றோரைத் தவிர வேறு யாருடனும் வெளியே செல்லக்கூடாது.ஏனெனில் அவர்கள் உங்கள் தனிமையைப் பயன்படுத்தி சீரழிக்கக் கூடும்,எங்கு சென்றாலும் தற்காப்புக்காக காவல் துறையின் உதவி எண்களைத் தெரிந்து கொள்ளுங்கள்,அது உங்களுக்கு எப்போதும் பயன்படும் எனக்குறிப்பிட்டார். காவல் உதவி ஆய்வாளர் மருதமுத்து பெண்கள் இந்நாட்டின் கண்கள் எனவே நாம் நம்மைக் காத்துக் கொண்டு நம்மைச் சார்ந்தோரையும் காப்பாற்ற வேண்டும் அதனால் எந்த நேரத்தில் பிரச்சனை என்றாலும் எதற்கும் அஞ்சாமல் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்,அதே போல் good touch,bad touch பற்றி அறிந்து வைத்திருத்தல் மிக மிக அவசியம்,நீங்கள் பயணிக்கும் இடங்களில் உங்களிடம் யாராவது தவறாக நடக்க முயற்சித்தால் தயங்காமல் காவல் துறையினரிடம் தெரியப்படுத்துங்கள், அது உங்களைக் காப்பது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற பல பெண்களின் வாழ்வைக் காக்கும், செல்போனில் தேவையில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,நம் பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாய் வீறு கொண்டு வெற்றி நடை போடுவோம் என இம்மகளிர் தினத்தில் உறுதியேற்போம் எனக்குறிப்பிட்டார். மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர்* அவர்கள் பேசும் பொழுது புகையிலைப் பொருட்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் உயிரைக் கொல்லும் அவற்றை நாமும் பயன் படுத்தக் கூடாது,நம்மைச் சார்ந்தோரையும் பயன்படுத்த விடக்கூடாது ஏனெனில் அது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நஞ்சாகும்.அதனால் தான் நமது தமிழக முதல்வர் அவர்கள் வேண்டாம் போதை என்ற வாசகம் தாங்கிய பதாகைகளை பொது இடங்களில் வைக்க உத்தரவிட்டுள்ளார்கள்,காவல் துறையினரும் அதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.அரசு மட்டுமல்லாது இப்பணியில் நாமும் கலந்து கொள்வோம் எனக்குறிப்பிட்டார். *புகையிலைக் கட்டுப்பாட்டு சமூக ஆலோசகர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தினால் பற்கள் கறையாகும், முக அழகுக் கெடும்,உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அழியத் துவங்கும் எனவே போதைப் பொருட்களை நாமும் பயன்படுத்தாமல் நம்மைச் சார்ந்தோரையும் பயன்படுத்த விடாமல் தடுப்போம் எனக் குறிப்பிட்டார். மகளிர் உதவி இலவச வழக்குப் பதிவாளர் அவர்கள் பேசும் பொழுது உங்களுக்கோ அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட உங்கள் சகோதரிக்கோ,அல்லது உங்கள் ஊரில் உள்ள பெண்களுக்கோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த இலவச சட்ட மையம் பற்றி எடுத்துரைத்து அவர்கள் இலவசமாக வழக்காடு மன்றத்தில் வழக்காடலாம் எனவும் பெண்களைப் பாதுகாக்க 181எண் மற்றும் செல்போன் செயலி ஒன்றினை அறிமுகஞ் செய்து வைத்தார்,அதன் பயன்களையும் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு வழங்கினார். இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட காவல் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் சாரண ஆசிரியர் சி.இரவிச்சந்திரன் இந்நிழ்வுகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், அவர்களது வாழ்க்கைக்கு பயன்படும் நூல்களையும் வழங்கி நன்றியுரை வழங்கினார். காவல் சிறுவர் மன்ற தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story





