நாகர்கோவிலில் ஒற்றை கம்பு சிலம்ப போட்டி

X
தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ.காலனியில் உள்ள இவான்ஸ் பள்ளியில் இன்று 8-ம் தேதி நடந்தது. போட்டி மாநகரச் செயலாளர் பா ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் இணைந்து தொடங்கி வைத்தனர். ஒற்றைக்கம்பு சிலம்பாட்ட போட்டி ஆண்,பெண்களுக்கு 10 ,12, 14, 16 என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது .குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கிளப்புகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கமும், இரண்டாவது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்பவர்களுக்கு சுழற் கோப்பை வழங்கப்படுகிறது .இவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை மாலை நடக்கிறது.
Next Story

