திருச்செங்கோட்டில் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டம்
X
திருச்செங்கோட்டில் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மனின் வழிபாட்டிற்கு இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மற்றும் அபிராமி வழிபாட்டுக் குழுவும் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊர்வலமாக சென்றனர் இதனை தடுத்து காவல்துறையினர் என்பது பேரை கைது செய்து அதில் 5 பேரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் இதனை கண்டித்தும் காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் இன்று தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் ரோடு ஐயப்பன் கோயில் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டனர் இது குறித்து இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாதன் கூறும்போது திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி வழிபாட்டிற்காக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகளும் அபிராமி வழிபாட்டு குழுவினரும் ஊர்வலமாக சென்றதை தடுத்து என்பது பேரை கைது செய்து அதில் 50 பேரை நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர் இதனை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்திலும் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது இந்து மக்களை ஒன்று திரட்டி நாங்கள் போராடுவோம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது போலவும் சென்னி மலையில் நடைபெற்றது போலவும் இந்து மக்களை ஒன்று திரட்டி போராடுவோம் என்று கூறினார் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
Next Story