*மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண்களின் இல்லம் தேடிச் சென்று வளைகாப்பு நடத்திய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர்*

*மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண்களின் இல்லம் தேடிச் சென்று வளைகாப்பு நடத்திய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர்*
X
*மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண்களின் இல்லம் தேடிச் சென்று வளைகாப்பு நடத்திய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர்*
மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண்களின் இல்லம் தேடிச் சென்று வளைகாப்பு நடத்திய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர் அருப்புக்கோட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் 51 கர்ப்பிணி பெண்களின் அவர்களின் இல்லத்திற்கே தேடிச்சென்று வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீடு தேடிச்சென்று கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயமணி தலைமையில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி நிர்வாகிகள் பாளையம்பட்டி வேல்முருகன் காலனி, அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர், கலைஞர் நகர், பெர்க்கின்ஸ்புரம், முஸ்லிம் தெரு, குழந்தைவேல்புரம், சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களின் வீட்டிற்கே தேடி சென்று வளைகாப்பு நடத்தினர். கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து மல்லிகை பூ சூடி, கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிவித்து, அவர்கள் சத்து மாவு உருண்டை ஊட்டி விட்டு தட்டு, டம்ளருடன் செவ்வாழைப்பழம், வெற்றிலை பாக்கு என வளைகாப்பு பொருட்கள் வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் த.வெ.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story