மகளிர் தான் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாறி முதலிடத்தில் உள்ளனர்-* *விருதுநகரில் 'உலக மகளிர் தின விழாவில் நிதியமைச்சர் பேச்சு

மகளிர் தான் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாறி முதலிடத்தில் உள்ளனர்-* *விருதுநகரில்  உலக மகளிர் தின விழாவில் நிதியமைச்சர் பேச்சு
X
மகளிர் தான் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாறி முதலிடத்தில் உள்ளனர்-* *விருதுநகரில் 'உலக மகளிர் தின விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு*
பெண் அடிமையல்ல எல்லா துறையிலும் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்; இந்தியாவிலேயே தமிழக மகளிர் தான் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாறி முதலிடத்தில் உள்ளனர்- விருதுநகரில் 'உலக மகளிர் தின விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட 'உலக மகளிர் தின விழா 2025' மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு ஊரக பகுதியை சார்ந்த 703 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.62.41 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், மற்றும் நகர்புற பகுதியை சார்ந்த 128 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.50 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், இதர மகளிர் நலத் திட்டங்களின் கீழ் 410 நபர்களுக்கு 2.30கோடியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 186 நபர்களுக்கு 2.16 கோடியும் ஆக மொத்தம் 10569 நபர்களுக்கு 87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானிய ஆணைகளை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.பெண்கள் ஏன் அடிமையாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கேட்ட கேள்வி தான்,இன்று பெண்கள் முன்னேற காரணமாக இருக்கிறது என்றும் பெண் அடிமையல்ல எல்லா துறையிலும் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர் என்றும் இந்தியாவிலேயே தமிழக மகளிர் தான் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாறி முதலிடத்தில் உள்ளனர் என்றார்.
Next Story