உலக மகளிர் தினத்தை ஒட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கென மாரத்தான் ஓட்டம்

X
அரியலூர், மார்ச் 8- உலக மகளிர் தினத்தையொட்டி, அரியலூரில் மாவட்ட காவல் துறை சார்பில் பெண்களுக்கென மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பெண்கள் பாதுகாப்பு குறித்த உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி என அச்சடிக்கப்பட்ட டீசர்ட்}னை அணிந்து கொண்ட 300 பெண்கள், செந்துறை ரவுண்டானா, கொல்லாபுரம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வரை ஓடி, மீண்டும் அதே வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடித்துக் கொண்டனர். இதில் வெற்றிப் பெற்ற பெண்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன் (மதுவிலக்கு அமல் பிரிவு), மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் , அரியலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரமோகன், போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

