பரமத்தி வேலூர் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு கே.எஸ். மூர்த்தி பங்கேற்பு.

X
Paramathi Velur King 24x7 |8 March 2025 8:35 PM ISTபரமத்தி வேலூர் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு கே.எஸ். மூர்த்தி பங்கேற்று திறந்து வைத்தார்.
பரமத்திவேலுார்,மார்ச்.8: பரமத்தி வேலூர் தி.மு.க. சார்பில் நீர், மோர், மற்றும் பழ வகைகள் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நீர் மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனராசு கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கண்ணன், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர்,கரும்புச்சாறு, தர்பூசணி பழம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் அவைத் தலைவர் மதியழகன், நகரக் துணைச் செயலாளர் செந்தில்நா தன்,பேரூர் வார்டு வார்டு செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பா ளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
