தி‌மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் கழகத் தலைவர் மு.க.ஸாடாலின் பிறந்தநாள் விழா

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஆலத்தூர் பகுதியில் பொதுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி‌மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் கழகத் தலைவர் மு.க.ஸாடாலின் பிறந்தநாள் விழா! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்- தலைமை கழக பேச்சாளர் தமிழினியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு‌.க.தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவிளக்குறிச்சி கிராமத்தில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில், தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஆனந்தன் வரவேற்புரை யின், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பெ.சுதா, சிரா.விஜய்,ப.சித்திரன், அ.திணேஷ், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முல்லைச்செல்வன்,குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சிவனேசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, அ.யசோதா, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.அஜித்குமார், எம்.சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், விராலிமலை சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சொ.தமிழினியன், தலைமை கழக பேச்சாளர் என்னை ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 2026- ஆம் ஆண்டும் தி.மு.க. வெற்றி வெற்றி பெறுவது உறுதி என்று உறுதிமொழியேற்க்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.அருண், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர்.ராகவி, ஆலத்தூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் அ.ராமராஜ்,அ.சரவணன், அ.சந்திரமோகன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.அழகுவேல், ம.பாஞ்சாலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிளக்குறிச்சி கிளைச் செயலாளர் சின்னதுரை நன்றியுரையாற்றினார்.
Next Story