மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.

X
ஆரணி அடுத்த இரும்பேடு நான்கு முனை சாலை இந்திரா காந்தி சிலை அருகில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோ.வி.லெனின், இளம் பேச்சாளர் லோ.ராதிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசை கண்டித்து பேசினார்கள். மேலும் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.ரஞ்சித் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், துரைமாமது, எஸ்.மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கே.கோவர்த்தனன், இளைஞரணி நிர்வாகிகள் பி.எஸ்.பாலாஜி, எஸ்.உதயராஜ், ஏ.விஜயகுமார், என்.ராஜாபாபு, டி.குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

