ஆலங்குளம் ஆலடி அருணா கல்லூரியில் மகளிா் தின விழா

ஆலங்குளம் ஆலடி அருணா கல்லூரியில் மகளிா் தின விழா
X
ஆலடி அருணா கல்லூரியில் மகளிா் தின விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லூரி, லிபரல் கலை -அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரித் தலைவா் டாக்டா் பாலாஜி தலைமை வகித்தாா். செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா முன்னிலை வகித்தாா். தென்காசி டாக்டா் கௌதமி தமிழரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. கலைக் கல்லூரி முதல்வா் அபுகனிபா மீரான் வரவேற்றாா். செவிலியா் கல்லூரி முதல்வா் நன்றி கூறினாா்.
Next Story