ராமநாதபுரம் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிர் திட்டத்துறையின் மூலம் 799 மகளிர் குழுக்களுக்கு ரூ.66.35 கோடி வங்கி கடன் திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார் ! தமிழ்நாடு முதலமைச்சர் உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துறையின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து, ராமநாதபுரத்தில் தனியார் மாகலில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், மகளிர் திட்டத்துறையின் மூலம் 799 மகளிர் குழுக்களுக்கு ரூ.66.35 கோடி வங்கி கடன் திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார். தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் வழங்கி வருவதால் தன்னிரை பெற்ற பெண்களாக மாறி வருவது பெருமிதமாக உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்,செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ராஜலெட்சுமி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மகளிர் திட்டத்துறை உதவி திட்ட அலுவலர்கள் வீரராகவன் மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து, கலை நிகழ்ச்சியிகள் நடைபெற்றன.
Next Story




