ஆசிரியை வீட்டில் நகை பணம் திருட்டு

ஆசிரியை வீட்டில் நகை பணம் திருட்டு
X
நல்லம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை 1.50 லட்சம் பணம் திருட்டு காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட புறவடை தேசிய நெடுஞ்சாலை அருகே வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா இவர் கோவிலூரில் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரும் இவரது தாயாரும் இந்த வீட்டில் வசித்து வரும் நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டில் வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த இவரது நகை 70 பவுன் மற்றும் இவரது தாயாரின் மேரியின் நகைகள் 30 பவுன் என 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஸ்டெர்லின் பெல்மா புகாரின் பேரில் அதியமான்கோட்டை காவலர்கள் வழக்கு பதிவு விசாரித்தனர்.மேலும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story