ராமநாதபுரம் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம்,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட்சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கல்லுாரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. ராமநாதபுரம் செய்து அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்த விழா விற்கு கிரிக்கெட் சங்கத் தலைவர்டாக்டர் பரூக் அப் துல்லாதலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய் யது அம்மாள் பொறியியல் கல்லுாரி முதல்வர் பெரிய சாமி பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு களை வழங்கினார். இந்த போட்டித் தொடரில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி அணி முதல் பரிசையும், செய்யது ஹமீதியா கலைக்கல்லுாரி அணி 2ம் பரிசும், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு கலைக்கல்லுலூரி அணியினர் 3ம் பரிசையும், முகமது சதக் பொறியியல் கல்லுாரி அணியினர் நான் காம் பரிசையும் பெற்றனர். ஆட்ட தொடர் நாயகன் விருது நவீன்குமாருக்கும், இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது முகிலனுக்கும் வழங்கப் பட்டது. தர்மேந்திர பிரகாஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ் வரன் மற்றும் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story



