குடும்ப அட்டை குறைதீர் முகாம்

X
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மற்றும் தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்டவைகள் தொடர்பாக, 38 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டது.
Next Story

