திருக்குவளை அடுத்த வலிவலத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில்

உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பதிவு உரிமம் முகாம்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பதிவு உரிமம் முகாம் நேற்று நடைபெற்றது. உணவு பாதுகாப்பு மற்றும் தரம் நிர்ணயச் சட்டம் 2006 -ன் படி, உணவை தொழிலாக நடத்தி வரும் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதால், இதனை தவிர்க்க வலிவலம் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைமையில், இலவசமாக பயிற்சி முகாம் உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து நடத்தப்பட்டது. முகாமில், மளிகை கடை, காய்கறி கடை, கறிக்கடை, பழக்கடை, ஸ்வீட் கடை, பெட்டிக் கடை, மெடிக்கல் மற்றும் தேநீர் கடை நடத்துப்பவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமில், வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.வி.சாகுல், செயலாளர் பி.கே.பக்கிரிசாமி, பொருளாளர் ஆர்.கே.சுரேஷ், உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஆண்டனி பிரபு, பாலகுரு, திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் வர்த்தக நல சங்கம் நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாகை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு உரிமத்தை வழங்கி, பயிற்சி முகாம் பணிகளை மேற்கொண்டனர். முடிவில், வர்த்த சங்க நிர்வாகி குமரேசன் நன்றி கூறினார்.
Next Story