திருவட்டார் :  சாலையில் இடையூறாக நிற்கும் மரம் 

திருவட்டார் :  சாலையில் இடையூறாக நிற்கும் மரம் 
X
பொது மக்கள் கோரிக்கை
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேலவெட்டுக்குழி சந்திப்பில் நெடுஞ்சாலை துறைக்கு  சொந்தமான இடத்தில் ஒரு மலைவாகை மரம் நிற்கிறது. இதன் கிளைகள் சாலையில் சாய்ந்து கிடப்பதால் லோடு ஏற்றிக் கொண்டு வரும்  லாரிகள் மற்றும் பேருந்துகள் இந்த மரத்தின் கிளைகளில் உரசுகின்றன. இதனால் வாகனங்கள் சாலையின் வலது புறமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.        இருபக்கம் வாகனங்கள் வரும்போது விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகிறது. மேலும் மரத்தின் கிளையில் வாகனங்கள் உரசி சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. இந்த மரத்தை ஆய்வு செய்து இதன் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் ஏற்கனவே ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜான் லெனின் முன்னிலையில் பத்மநாபபுரம் சார்-  ஆட்சியர், நெடுஞ்சாலை துறை பொறியாளர்களிடம்  மனு அளிக்கப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்த மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story