சந்தைப்பேட்டையில் ஆடுகள் விற்பனை சரிவு
தர்மபுரி சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வார சந்தை நடைபெற்று வருவது வழக்கம் இதனாலையில் மார்ச் 9 இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காகவும் வாங்குவதற்காகவும் வந்திருந்தனர். இன்று ஆடுகளின் வரத்து சரிந்து காணப்பட்டது மேலும் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20,000 வரை விற்பனையானது.தர்மபுரி சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 3 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக மேலும் சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தை வரலாற்றில் இன்று தான் மிக குறைந்த விலைக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story




