திராவிடம் என்றால் சிலருக்கு கசக்கும் அதை புரிந்து கொண்டால் இனிக்கும்,

திராவிடம் என்றால் சிலருக்கு கசக்கும் அதை புரிந்து கொண்டால் இனிக்கும்,
X
திராவிடம் என்றால் சிலருக்கு கசக்கும் அதை புரிந்து கொண்டால் இனிக்கும்,
திருப்பத்தூர் மாவட்டம் திராவிடம் என்றால் சிலருக்கு கசக்கும் அதை புரிந்து கொண்டால் இனிக்கும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சிமென்ட் சாலை அமைப்பது பெரிதல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு வகுப்பறை கட்டியதுதான் சிறப்பு என ஆம்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2.05 கோடி ரூபாய் மதிப்பில், மாணவிகளுக்கான விடுதி கட்டிடம் கட்டும் பணிக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டினர் அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில், 30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு அறிவுத்திறன் வகுப்பறைகளையும் அமைச்சர் திறந்து வைத்து, விழாவில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு.. நீண்ட நாட்களாக இருந்த உயர்நிலைப்பள்ளி திராவிட மாடல் ஆட்சியில் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது, 100 மாணவிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் விடுதிகள் கட்டப்பட உள்ளது, ஒப்பந்த காலத்திற்கு முன்னரே கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சியில் ஈடுப்பட வேண்டும், திராவிட மாடல் ஆட்சி என்றால், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அது தான் திராவிட மாடல் ஆட்சி, திராவிடம் என்றால் சிலருக்கு கசக்கும், நியாயமாக அது புரிந்துகொண்டால், அது இனிக்கும், திராவிடம் தோன்றவில்லையென்றால், தற்போது தலைமை உரையாற்றிய ஆட்சியர் உரையாற்றி இருக்கமாட்டார், , பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற முதுமொழி உள்ளது பெண்களை படி படி என்று கூறியவர் பெரியார், அண்ணா, கலைஞர், என்ற மும்மூர்த்திகள், ஆண்களுக்கு அடிமைத்தனம் இருக்க கூடாது என்று கூறியவர் பெரியார், ஆண்களுக்கு ஈகோ உண்டு , பெண்கள் படித்து அறிவாளி ஆகி நன்மை தாழ்த்தி விடுவார்கள் என்ற அடிமைத்தனம் உண்டு, பேசுகின்ற நானும் ஆண் தான் ஆனால், எனக்கு பரந்த உள்ளம் உண்டு,நான் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவன், அதனால் தான் எனது செல்போனில், எனது தாய் படத்தை தான் வைத்துள்ளேன், தாய் தான் என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தினார், தாயை வணங்கினால், போதும் கண்ட இடங்களில் வணங்க வேண்டாம்,தாயை வணங்கினால், எல்லாம் வணங்கியதாக அர்த்தம், மேலும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தனது நிதியில் இருந்து சிமென்ட் சாலைகள் அமைப்பது பெரிதல்ல, இதுபோன்ற மாற்றுத்திறனாளிகள் மகிழ்விக்கும் வகையில் வகுப்பறை கட்டியது மிகையாகது, அதில் ஸ்மார்ட் போர்டும், அமைத்திருப்பது சிறப்பு எனப்பேசினார்.. அதனை தொடர்ந்து 6 மாற்றுத்திறனாளிகளுக்கு 6 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.. இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story