பட்டுக்கோட்டையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி
தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி, மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் (RAWE) கீழ், பட்டுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கிராம வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குச் சென்று, கிராம வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றனர். இந்த சந்திப்பின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.வீரமணி, எஸ்.ஜான் கென்னடி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மல சகாயராஜ், ரெங்கராஜன், நித்யா ஆகியோருடன் மாணவர்கள் கலந்துரையாடினர். அவர்கள், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு பற்றிய முழுமையான விளக்கங்களை வழங்கினர். இந்த பயிற்சி மாணவர்களுக்கு நல்ல அனுபவமாகவும், அறிவுசார் வளர்ச்சிக்கு உதவியாகவும் இருந்தது. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நேரில் புரிந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Next Story



