மாற்று தீர்வு அலுவலகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமார் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று தீர்வு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து, சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி வரா கடன் வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட 3620 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 1003 வழக்குகளுக்கு ரூ.6 கோடியே 3 லட்சத்திற்கு தீர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி கார்த்திகா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருஷ்ணன், சார்பு நீதிபதி சீனிவாசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனபிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமச்சந்திரன் ஆகியோரின் அமர்வில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதைப்போல, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிமன்றங்களின் நீதிபதிகள் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
Next Story

